ஆபிரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாட்டுடன் பொருளாதார உறவை மேம்படுத்த பரிஸ் ஆர்வம் காட்டி வருகிறது.
அதனடிப்படையில் எத்தியோப்பிய- பிரான்ஸ் உறவில் ஒருபுதிய அத்தியாயமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனின் எத்தியோப்பியாவிற்கான நான்குநாள் விஜயத்தின் ஒருஅங்கமாக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதன்போது, எத்தியோப்பிய விமான விபத்தில் உயிரிழந்த 157 பேரின் குடும்பங்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.






