பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகளின் தாக்குதல் மற்றும் பாகிஸ்தான் இராணுவத்தின் எல்லை தாண்டிய அத்துமீறிய துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவிவருகின்றது.
இதன் காரணமாக ஜம்மு-காஷ்மீரில் உள்ள இந்திய எல்லைப் பகுதிகளில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பூஞ்ச் மற்றும் ரஜௌரி மாவட்டங்களில் மொத்தம் 400 பதுங்கு குழிகள் அமைத்துக்கொள்ள பாதுகாப்புப் படையினருக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதையடுத்து இந்த 400 பதுங்குக்குழிகளும் அடுத்த ஒரு மாதத்துக்குள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
