தொழிற்சங்கவாதி சின்னப்பொடி வேலுவின் நாற்பத்தொன்பதாவது சிராத்த தினம் இன்று (புதன்கிழமை) கொடிகாமத்தில் காலை 10 மணியளவில நினைவுகூரப்பட்டது.
இந்த நிகழ்வு சாவகச்சேரி பிரதேச சபை உப தவிசாளர் செ.மயூரன் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாட்டின் நிலமைகள் தொடர்பாக ஜ.நா.வில் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் விவாதங்கள் இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில் எமது மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் விடயம் உடனடியாக சர்வதேச விசாரணை ஒன்றை ஆரம்பித்து எமது மக்களின் நிரந்தர தீர்வுக்கான வழிகாட்டல்களைச் செய்ய வேண்டும்.
அதற்காக ஜ.நா.வும் அது சார்ந்த நாடுகளும் சர்வதேச விசாணைக்காக தமது முன்னெடுப்புக்களையும் ஆதரவுகளை வழங்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.






