ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெற்று வருகின்றது.
இந்தநிலையில் இதுதொடர்பாக ஜெனீவாவிலுள்ள ஆதவனின் சிறப்பு செய்தியாளர்களுக்கு வழங்கியுள்ள விசேட நேர்காணல் ஒன்றிலேயே தமிழர் மனித உரிமை மையத்தின் பொதுச்செயலாளர் எஸ்.வீ கிருபாகரன் இவ்வாறு தெரித்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் குறைந்தது 24 நாடுகளின் ஆதரவு எமக்கு இல்லை என்றால் தமிழ் மக்கள் மட்டுமல்ல எந்த இனத்தினைச் சேர்ந்தவர்களாலும் இங்கு எதனையும் செய்ய முடியாது.
எனவே நாங்கள் 47 நாடுகளில் அதிகளவான நாடுகளை எமக்கு சார்பாக கொண்டு வந்தால் மாத்திரமே எதனையும் செய்ய முடியும். எனினும் தற்போதைய நிலையில் எங்களுக்கு அப்படியான ஆதரவு இல்லை“ என அவர் குறிப்பிட்டார்.






