இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு மற்றும் மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.
இந்த குழுநிலை விவாத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘கடந்த ஆண்டு வீதிகள் நிர்மாணிக்க செலவிடப்பட்ட தொகையையையும் விட ராஜபக்ஷவினரின் படங்கள் பொறிக்கப்பட்ட கட்டவுட்களை தயாரித்து நகரங்கள் தோறும் தொங்கவிட செலவிடப்பட்டிருக்கின்றது.
என்றாலும் தற்போது அந்த நிலைமை மாற்றமடைந்துள்ளது. எமது அமைச்சர்களின், பிரதமரின் கட்டவுட்கள் தொங்கவிடப்படுவதில்லை’ என தெரிவித்துள்ளார்.
