இதுகுறித்த வழக்கு இன்று(வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே இந்த வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு பிரதம நீதவான் நீதின்றம் தீர்மானித்துள்ளது.
இதன்போது மனுவுக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிக்கவுள்ளதாக பிரதிவாதி சார்பான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
இடர் முகாமைத்துவ அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஏ.எச்.எம்.பௌசி அமைச்சுக்கு சொந்தமான 19.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாகனங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
