“மூடருக்கு அடிபணியாதே| வலியோருக்குப் பாகுபாடு காட்டாதே.
இறக்கும் வரை உண்மைக்காகப் போராடு| கடவுளாகிய ஆண்டவர் உனக்காகப் போரிடுவார்.
பேச்சில் துடுக்காய் இராதே| செயலில் சோம்பலாகவும், ஈடுபாடின்றியும் இராதே.
வீட்டில் சிங்கம் போல் இராதே| பணியாளர் முன் கோழையாய் இராதே.”
உண்மைக்காக சாகும் வரை விட்டுக் கொடுக்காது போராடுவது கடவுளுக்கு உகந்த செயலாகும். ‘சொல்வது தவறு என்றால் சுட்டிக் காட்டு| நான் சொன்னது சரியென்றால் நீ என்னை அடிப்பானேன்?’ என்று மரணத்தின் விளிம்பிலிருந்தும் அஞ்சாது கேட்ட இயேசு பிலாத்திடம் உண்மைக்குச் சாட்சியம் சொல்லவே வந்தேன் என்று உறுதிபட நெஞ்சை நிமிர்த்தி நின்று பேராடுகின்றார். தமக்கு மரணத் தீர்வு கிடைத்தாலும் அவர் அதிலிருந்து பின் வாங்கப் போவதில்லை என்பதை பிலாத்திடமே தெளிவாகக் காட்டி விடுகின்றார். நமக்குத் தெரிந்தவர் என்பதற்காகவும், அவருக்கு எதிராக நின்றால் நம் வாழ்வு பாதிக்கப்படும் என்பதற்காகவும் நாம் நீதியைக் கைகழுவி விட்;டால் தேவைப்படும்போது நீதி நம்மைக் கைவிட்டு விடும். எவர் எந்தளவுக்கு முக்கியமானவர்களாய் இருந்தாலும், பெரு மனிதர்களாக. புனிதர்களாகத் தம்மைக் காட்டிக் கொண்டாலும் நாம் நீதி வழி நின்று போராடும்போது கடவுளின் அருள், நீதி தேவனின் வலிய கரம் நம்மோடு நம் போராட்டத்தில் உடனிருந்து செயற்படும் என்பது உறுதி!
பத்தாம் நிலை
அவமானப்படும் இயேசு
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் சொல்லுகின்றோம்.
அதேதென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்
பிறர் வெறுமை கண்டு .. .. அவர் வறுமை கண்டு .. .. மகிழ்ந்தவர் இயேசு அல்ல.. .. அடுத்தவர் ஏழ்மை கண்டு .. .. அவர் எளிமை கண்டு சிரித்தவர் இயேசு அல்ல ... ...!
மனித நிறத்தைக் கண்டு .. .. அவன் பணத்தைக் கொண்டு .. .. மதிப்பைக் கொடுத்தவர் இயேசு அல்ல .. ..ஒருவன் மதத்தைக் கொண்டு .. .. அவன் இனத்தைக் கொண்டு இழிவு சொன்னவர் இயேசு அல்ல .. ..!
மனித மடமை கண்டு.. .. அவன் அறியாமை கண்டு நகைப்பவர் இயேசு அல்ல .. ..
ஆனால் அவரோ வெறுமையாக்கப்பட்டு .. .. பரிகசிக்கப்பட்டு .. .. நகைக்கப்பட்டு..
இன்று பெருமைப்படும் மனிதங்களாக வாழும் நாம் எத்தனை தூரம் கிறீஸ்தவன் என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு இயேசு வெறுத்தவற்றையும், .. .. செய்ய மறுத்தவற்றையும் செய்து கொண்டிருக்கின்றோம் .. ..?
நாம் உயர்ந்துவிட்டோமென்றும்,.. ..பிறர் தாழ்ந்து போயினரென்றும் சிரிப்பவர் வாழ்வு கண்டு ஒரு நாள் பிறர் நகைக்கவே செய்வர்.. .. ஏனென்றால் வாழ்க்கை என்பது வண்டிச் சக்கரம் போன்றது... .. அதில் எந்தப் புள்ளியும் நிலையாய் இடத்தில் இருப்பதில்லை ... .. உயர்வும் தாழ்வும் அங்கே பழக்கம் .. .. இதை ஏற்காதார் வாழ்வு நகைக்குள்ளாகும் என்பதே உலக வழக்கம்!
மனிதத்தை மதிப்பார் அதன் நிலை கண்டு நகைப்பதுமில்லை, எள்ளி நகையாடுவதுமில்லை.. .. !
பிறரை மதித்த இயேசுவிடம் போய் உண்மையைச் சொல்லி வைப்போம்:-
“பிறர் வாழ்வைக் கண்டு.. .. அவர் வாதை கண்டு நகைத்தவன் நான் இயேசுவே.. .. அவர் நிறத்தைக் கண்டு, வெறுந் தோற்றங்கண்டு வெறுத்தவன் நான் இயேசுவே.. .. மற்றவர் அந்தஸ்துக்கும்.. .. அவர் பணத்திற்கும் மதிப்புத் தந்தவன் நான் இயேசுவே.. .. அயலவன் மனத்திற்கும்.. .. அவன் குணத்திற்கும் இடத்தை நான் கொடுத்திட வரம் தாரும் இயேசுவே.. .. “
எங்கள் பேரிற் தயவாய் இரும் சுவாமி.. .. எங்கள் பேரிற் தயவாய் இரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சர்வேசுரனின் இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவன.
