அமைச்சர்கள் மட்டத்திலான இந்தப் பேச்சுவார்த்தை எதிர்வரும் மாதமளவில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கையின் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் அமைச்சர் மலிக் சமரவிக்ரம அடுத்தமாதம் சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதன்போது அவர் சீனாவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக, அமைச்சர்கள் மட்ட கலந்துரையாடலை நடத்தவுள்ளதாக கூறப்படுகின்றது.
விரைவில் இதுகுறித்து சீன அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடன் தாம் பேசவுள்ளதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
