LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, March 22, 2019

இலங்கையின் சுயாதீனத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – ரணில்

கலப்பு நீதிமன்ற பொறிமுறையை ஜெனீவா கூட்டத்தொடரில் நிராகரித்ததன் மூலம் இலங்கையின் சுயாதீனத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தேசபிதா டி.எஸ். சேனாநாயக்கவின் கொள்கைவழியில்தான் நாம் பயணிக்கின்றோம் என்பது நேற்று கூட உறுதிப்படுத்தப்பட்டது.

சர்வதேச நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு நீதிமன்ற பொறிமுறை அவசியம் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் ஜெனீவா தொடரில் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும், இலங்கை ஜனநாயக நாடு. சுயாதீன நீதிமன்ற கட்டமைப்பு இருக்கின்றது என சுட்டிக்காட்டி மேற்படி கோரிக்கையை வெளிவிவகார அமைச்சர் நிராகரித்தார்.

அத்துடன், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் செயலகமொன்றை இலங்கையில் அமைக்கவேண்டியதில்லை. மனித உரிமை ஆணையாளர் எந்நேரத்தில் வேண்டுமானாலும் எமது நாட்டுக்கு வரலாம் என்றும் எமது நாட்டின் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்மூலம் இலங்கையின் சுயாதீனத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டது. அதேவேளை, படையினரை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்ல இடமளிக்கப்படாது.

எவராவது தவறிழைத்திருக்கும் பட்சத்தில் உள்நாட்டில் வழக்கு தொடுத்து நடவடிக்கை எடுக்கலாம். எமது அரசு படையினரை தண்டிக்கவில்லை. மாறாக ஐ.நா. அமைதிப்படைக்கே ஆட்களை அனுப்பியுள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7