முன்னாள் இராணுவ அமைச்சரும் கோவா முதலமைச்சருமான மனோகர் பரிக்கர் மறைவையடுத்து நாளை துக்க தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.அத்துடன் மத்திய அமைச்சரவை சார்பில் நாளை இரங்கல் கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த இரங்கல் கூட்டம் நாளை காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் மனோகர் பரிக்கர் மறைவையொட்டி தேசிய தலைநகரம் மற்றும் மாநிலத் தலை நகரங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மனோகர் பரிக்கர் கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று இரவு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது





