கோவா மாநிலம் இணையற்ற தலைவரை இழந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் வெளியிட்டுள்ளார்.மனோகர் பாரிக்கர் ஒரு இணையற்ற தலைவர், அவரது மறைவால் மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன் என தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இவ்விடயம் குறித்து பிரதமர் மோடி தனது பதிவில் மேலும் குறிப்பிடுகையில், ‘மனோகர் பாரிக்கர் ஒரு இணையற்ற தலைவர். உண்மையான தேசபக்தி மற்றும் சிறந்த நிர்வாகி ஆவார். அனைவராலும் பராட்டப்பட்ட ஒரு தலைவர்.
இந்த தேசத்திற்காக அவர் செய்த உண்மையான பணிகள் வரும் தலைமுறைகளால் நினைவுகூரப்படும். அவருடைய இறப்பினால் மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன். அவருடைய குடும்பத்தார் மற்றும் ஆதரவாளர்களுக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் பதிவிட்டுள்ளார்.





