இதன்படி 153 அமைச்சர்களின் சொத்துமதிப்பு சுமார் 143 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2009ஆம் ஆண்டு பா.ஜ.க., காங்கிரஸ், அ.தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம், பிஜு ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி உள்ளிட்ட 21 கட்சிகளை சேர்ந்த 153 அமைச்சர்களின் சொத்து மதிப்பே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் காலம் நெருங்கியுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு பற்றிய பிரமாண பத்திரத்தினை தாக்கல் செய்யவேண்டும் என தேர்தல் ஆணையகம் அண்மையில் அறிவித்திருந்தது.குறித்த பத்திரத்தில் இடம்பெற்றிருத்த விடயங்களை அடிப்படையாக கொண்டே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.






