மட்டக்களப்பு மாநகர முதல்வரின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மாநகர
சபைக்கு வருகை தந்த நடிகர் விவேக் அவர்களுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது
மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் அழைப்பின் பேரில்
மட்டகளப்பு மாநகர சபைக்கு வருகை தந்த பத்மஸ்ரீ நடிகர் விவேக் அவர்களுக்கு
மாநகர முதல்வர் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் மாநகர சபை
உத்தியோகத்தர்களினால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது .
இதன் ஆரம்ப நிகழ்வாக மட்டக்களப்பு நகர் காந்திபூங்காவில்
அமைக்கப்பட்டுள் மகாத்மா காந்தியில் உருவ சிலைக்கு பத்மஸ்ரீ நடிகர் விவேக்கினால் மலர்
மாலை அணிவிக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது ,அதனைதொடர்ந்து காந்தி பூங்கா வளாகத்தில் மரக்கன்று ஒன்றும் நாட்டி வைக்கப்பட்டதுடன் நீருற்று பூங்காவில்
அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் உருவ சிலைக்கும் மலர் மாலை வைத்து வணக்கம் செளுத்தப்பட்டது
இதனை தொடர்ந்து மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வினை தொடர்ந்து
பத்மஸ்ரீ நடிகர் விவேக்கு பொன்னாடை போர்த்தி நினைவு
சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்
இந்நிகழ்வில் மாநகர முதல்வர் , மாநகர ஆணையாளர் , பிரதி முதல்வர்
,உட்பட மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என
பலர் கலந்துகொண்டனர்





