இலங்கை
ஆசிரியர் தொழில் சங்கத்தினால் மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய
ரீதியில் இன்று கவனயிர்ப்பு போராட்டத்தினை
முன்னெடுத்து வருகின்றது
இதற்கு ஒத்துழைப்பினை வழங்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில்
உள்ள அனைத்து பாடசாலைகளிலுள்ள அதிபர்கள்,ஆசிரியர்கள் , கருப்பு பட்டி
அணிந்தவாறு தமது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பினை காட்டும்
வகையில் இன்று காலை பாடசாலைக்கு முன்னாள் நின்று
தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்
இந்த கவனயிர்ப்பு போராட்டம் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி ,
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை , மட்டக்களப்பு மகாஜன கல்லூரி ஆகிய
பாடசாலைகளில் இன்று காலை முன்னெடுக்கப்பட்டன





