சிரியாவில் ஐ.எஸ் வசமிருந்த கடைசிப்பகுதியான பாக்ஹுஸ்ஸில் கடந்த சில தினங்களாக ஐ.எஸ் மற்றும் சிரிய அமெரிக்க ஆதரவு படைகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஐ.எஸ் வசமிருந்த பகுதியை அமெரிக்க ஆதரவு படைகள் நேற்று (புதன்கிழமை முற்றுகையிட்டிருந்த நிலையில் ஐ.எஸ் போராளிகள் பலம் வாய்ந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலை சிரிய படைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
இதேவேளை ஐ.எஸ் போராளிகள் நடத்திய தாக்குதலை குர்திஸ்சினரின் றொனாஹி டி.வியும் ஒளிபரப்பியுள்ளது. தாக்குதலின் சத்தம் மிக தெளிவாக உணரப்பட்டதாக சிரிய படைகள் மேலும் தெரிவிக்கின்றன.
குழந்தைகள் உட்பட பொது மக்கள் அதிகம் இருந்த காரணத்தால் பாக்ஹுஸ்ஸில் ஐ. எஸ் மீதான தாக்குதல்கள் தாமதப்படுத்தப்பட்டிருந்தது. மக்கள் வெளியேறிய நிலையில் சிரிய அமெரிக்க படைகளின் தாக்குதல்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
