ஆப்கானிஸ்தான் நாட்டின் காஸ்னி மாகாணத்தில் உள்ள கெரோ மாவட்டத்தில் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகக் கருதப்படுகிறது.
இந்த பகுதியில் பதுங்கியுள்ள தலிபான் பயங்கரவாதிகளைக் குறிவைத்து ஆப்கானிஸ்தான் இராணுவத்தினர் இன்று (வியாழக்கிழமை) வான்வழியாக தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் அந்த பகுதியில் இருந்த 17 கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்
