இதன்படி, வெறுக்கத்தக்க மற்று பயங்கரவாத செயற்பாடுகளை தூண்டும் விதமான கருத்துக்களை சமூக ஊடகங்கள் அகற்றிக் கொள்ள வேண்டும் என்று கனடா வலியுறுத்தியுள்ளது.
நியுஸிலாந்து, கியுபெக் நகரம், பிட்ஸ்பேக் மற்றும் சில இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் வலதுசாரி தீவிரவாதிகள் இணையத்தை பயன்படுத்தி வெறுக்கத்தக்க கருத்துக்கள் மற்றும் மூளைச் சலவை செய்து மற்றவர்களை தூண்டும் வகையில் செயற்பட்ட சந்தர்ப்பங்களை கருத்தில் கொண்டு இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக சிறுபான்மையினருக்கு எதிராக தவறான வழிநடத்தல்கள் அதிகரிக்கின்ற அதேவேளை, வௌ்ளையின மக்கள் தொடர்பாக பிழையாக கருதுகோள்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பாக தாம் மிகவும் கவனமாக செயற்பட்டுவருவதாக கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரால்ஃப் கூடலே தெரிவித்துள்ளார்.






