LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, March 24, 2019

ரோஹிங்ய அகதிகளை இடமாற்றும் திட்டத்துக்கு ஐ.நா வரவேற்பு

பங்களாதேஷின் நெரிசல்மிக்க முகாம்களில் வாழும் ரோஹிங்ய அகதிகளின் ஒருபகுதியை வேறு இடத்திற்கு மாற்றும் அந்நாட்டுத் திட்டத்தை ஐக்கிய நாட்டு சபை வரவேற்றுள்ளது. எனினும் அது அகதிகளின் விருப்பத்திற்கிணங்க இந்த மாற்றம் இடம்பெறவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மியன்மாரிலிருந்து தப்பிவந்த 600,000 ரோஹிங்யா அகதிகள் பங்களாதேஷின் தென்கிழக்கு வட்டாரத்தில் உள்ள Kutupalong முகாமில் தற்போது தங்கியிருக்கின்றனர்.

உலகின் மிகப்பெரிய முகாம் என்று கருதப்படும் அங்கு மிகவும் நெரிசலான சூழலில் அகதிகள் வாழ்வதாக ஐக்கிய நாடுகளின் உதவி பாதுகாப்பு ஆணையர் வால்கர் டர்க் கூறியுள்ளார்.

ரோஹிங்யா அகதிகளை வங்கக் கடலில் உள்ள பஷான் சார் (Bhashan Char) என்னும் தீவுக்கு இடமாற்றம் செய்வதற்கு முன்னர், அகதிகளின் விருப்பத்தைத் தெரிந்துகொள்ளவேண்டும் என அவர் பங்களாதேஷிடம் கோரியுள்ளார்.

குறித்த தீவு வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்குகின்றது. இதனால் அகதிகளின் இடமாற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பிரிவு பங்களாதேஷுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது.

ரோஹிங்யர்களுக்கு எதிராக மியன்மாரில் கடந்த 2017 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் சுமார் 730 ௦௦௦ பேர் அண்மைய நாடான பங்களாதேசுக்கு தப்பிச்சென்றமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7