டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படும். அது மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு புதிய பிரதமர் பதவி ஏற்பார்.
நான் பிரதமர் ஆக விரும்பவில்லை. பிரதமரை உருவாக்கத்தான் விரும்புகிறேன்.
பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டி போடுவது அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கத்தான்“ என தெரிவித்துள்ளார்.
