கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொது தீட்சிதர்கள் சார்பில் இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதலே தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்க மாணவ மாணவிகள் மற்றும் கலைஞர்கள் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வருகை தந்திருந்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம், 4 வெளிப்புற பிரகாரங்களிலும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி காலை 8 மணிக்கு நடைபெற்றது. நாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியன் ஆரம்பித்துவைத்த இந்த நிகழ்ச்சியில் 7 ஆயிரத்து 195 நாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர். இதனை முன்னிட்டு 200க்கும் மேற்பட் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டனர்.
குறித்த நிகழ்ச்சியில் கின்னஸ் உலக சாதனை பதிவு அதிகாரி இங்கிலாந்தைச் சேர்ந்த ரிஷிநாத் கலந்து கொண்டு உலக சாதனையில் இதனை பதிவு செய்தார்.
இதற்கு முன்பு சென்னை வேல்டெக் வளாகத்தில் 4 ஆயிரத்து 500 பேர் கலந்துகொண்ட நாட்டியாஞ்சலி நடத்தப்பட்டது. தற்போது அதனை முறியடித்து 7 ஆயிரத்து 195 நாட்டிய கலைஞர்கள் கலந்துகொண்டு சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
