புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பயங்கரவாதிகள் இந்திய விமான நிலையங்களில் தாக்குதல் நடத்தக்கூடும் என்று மத்திய அரசுக்கு புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) ஏழடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயணிகளை வழியனுப்பவரும் பார்வையாளர்கள் விமான நிலையத்திற்குள் நுழையத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயணிகள் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
விமான நிலையத்துக்கு வருகைதரும் வாகனங்கள் நன்கு சோதனையிடப்பட்டு கட்டடத்தின் முன்பு வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. விமானத்துக்கு உணவு கொண்டு வரும் வாகனங்களை சம்பந்தப்பட்ட விமான போக்குவரத்து நிறுவனத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி தீவிர சோதனை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ள்து.
அதேநேரம், அடுத்த அறிவிப்பு வரும்வரை விமான நிலையங்களில் பார்வையாளர்களை அனுமதிக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள்து.
புலனாய்வுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்கள், அனைத்து மாநில உயர் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க விமான நிலையங்கள், விமான ஓடுதளங்கள், விமானப்படை தளங்கள், ஹெலிகொப்டர் தளங்கள், விமான பயிற்சி பாடசாலைகள் ஆகியவற்றில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
