LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, March 9, 2019

இலக்கியப் பொன் விழாக் காணும் கலாபூணம் ஆசுகவி அன்புடீன்.

இலக்கிய உலகில் பேசப்படும் கலாபூஷணம் ஆசுகவி அன்புடீன் அவர்களுக்கான இலக்கியப் பொன்விழாவும்,சிற்பம் செதுக்கிய சிற்பி மலர் வெளியீடும் நாளை ஞாயிற்றுக்கிழமை(10-03-2019)காலை 9.00 மணிக்கு அட்டாளைச்சேனை, மீனோடைக்கட்டு அல்-ஷக்கீ மண்டபத்தில் முன்னாள் வெளிநாட்டு தூதரக அதிகாரி எம்.ஸிராஜ் அஹமத் தலைமையில் நடைபெறவுள்ளது.இதனையொட்டி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

இலக்கிய உலகில் பரந்து பேசப்படுபவர் கவிஞரும்,எழுத்தாளருமான அன்புடீன் இவர் மேடை நாடகத்தின் ஊடாக இலக்கியப் பரப்புக்குள்  நுழைந்தவர் அதனைத் தொடர்ந்து கவிதையிலும்.சிறுகதையிலும்; பிரபல்லியாமானார்.இன்று வரை பல புத்தகங்களை வெளியிட்டு இலக்கிய பரப்பில் மிகவும் ஆழமாக தடம் பதித்துள்ளார்.

எல்லோருடனும் இவர் மிகவும் அன்பாகவும்.பண்பாகவும்.பேசுவதனாலும்;,  பழகுவதானாலோமோ என்னவோ அன்புடீன் என்ற புனைப் பெயர் இவரில் ஆழமாக வேரூன்றி இருக்கின்றது.இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு இவர் நல்ல வழிகாட்டி இவரது வழிகாட்டலில் பலர் இலக்கியத்தில் வளர்ந்திருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கலந்தர் லெப்பை என்ற இயற்கைப்பெயரைக் கொண்ட இவர் 1951.08.25ஆம் திகதி பாலமுனையில் பக்கீர் முஹிதீன், ஆசியா உம்மா தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.பாலமுனை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை,நிந்தவூர் அல்-அஷ்ரக் மகா வித்தியாலயம்அகியவற்றில் கல்வி கற்றவர்.1975.06.15ஆம் திகதி தொடக்கம் 2011.08.25ஆம் திகதி வரை அஞ்சல் பட்டுவாடா உத்தியோகத்தராகத் தொழில் புரிந்துள்ளார்.

1968ஆம் ஆண்டு மேடை நாடகத்தின் ஊடாக இவரது கலை இலக்கிய பிரவேசம் ஆரம்பமாகியுள்ளது.இவரது முதற் கவிதை “குயிலே நீ கூவு”  என்ற தலைப்பில்1968 ஆம் ஆண்டு குயிலோசை சஞ்சிகையில் பிரசுரமாகியுள்ளது. இதுவரை இவர் வெளியிட்டுள்ள நூல்கள்:-அன்னை மகிழ்கிறாள்(வரலாறு1982) முகங்கள்(கவிதை 1988)ஐந்து தூண்கள்( கவியரங்குக் கவிதை 1999)சாமரையில் மொழி கலந்து(கவிதை 2002)நெருப்பு வாசல்(சிறுகதை 2011)06. தொப்புள் கொடியும் தலைப்பாகையும்(கவிதைத் 2016) மத்திய அரசின் சாஹித்ய மண்டல பரிசும், கொடக்கே சாகித்ய மண்டல விருதும் பெற்றது)

வானொலியிலும் மேடையிலும் அரங்கேற்றப்பட்ட நாடகங்கள்

கொhக்குகள் வாழ்கின்றன(வானொலி)மலர்ந்தும் மலராத(வானொலி) கரைகாணத் துடிக்கும் படகுகள்(வானொலி)படித்ததுபோதும் பெட்டியைக் கட்டு  (மேடை) நேர்மை தந்த புது வாழ்வு  (மேடை)உண்மைகள் உறங்குவதில்லை(மேடை)சட்டத்தின் சரங்கள்  (மேடை)ஒரே குடையின் கீழ்  (மேடை)கடன் கட்டினால் கல்யாணம்  (மேடை) அளவுக்கு மிஞ்சினால்  (மேடை) தரை மீன்கள்  (மேடை) மோகத்தை கொன்றுவிடு  (வில்லுப்பாட்டு)

விருதுகள்,பட்டங்கள்,கௌரவங்கள்

கல்முனை புதுமை கலை இலக்கிய வட்டம் (புகவம்) ஆசுகவி பட்டம், விருது -1999,அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி “கவித் தாரகை" பட்டம், விருது -1999,கொழும்பு பரிய நிலா கலை கலாசார பேரவை“கவிமாமணி" பட்டம் - 2000,உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு, கலைஞர் கௌரவிப்பு 2002,தினச்சுடர் பத்திரிகை,வருடாந்த சிறந்த கவிஞர் விருது(Best Poet) 2004. அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாசார விழா, கவிஞர் கௌர விப்பு - 2007. அம்பாரை மாவட்ட செயலக சாஹித்திய விழா, கலைஞர் கௌரவிப்பு, திகாமடுல்ல அபிமானி விருது - 2008.கலாசார அலுவல்கள் திணைக்களம், கலாபூஷணம் விருது - 2009.நிந்தவூர் கமு மீடியா கலைஞர் கௌரவிப்பு. கவிச்செம்மல் பட்டம், விருது - 2009.மல்லிகை சஞ்சிகை முகப்புப் படம் பிரசுரிப்பு - 2012.கிழக்கு மாகாண கல்வி கலாசார அமைச்சு முதலமைச்சர் , இலக்கிய வித்தகர் விருது - 2012.அகில இலங்கை லுஆஆயு தேசிய கௌன்சில் சமூக சேவையாளர் கௌரவிப்பு ஹபீபுல் இன்ஸானி பட்டம் - 2013.காத்தான்குடி நவ இலக்கிய மன்றம் 55ஆவது ஆண்டு விழா. கலைஞர் கௌரவிப்பு இலக்கிய வாரிதி பட்டம், சான்றிதழ் - 2014.அக்கரைப்பற்றுGlobal Activity Foundation    நடத்திய சிறந்த படைப்பாளி விருது - 2014. அட்டாளைச்சேனை பிரசே செயலகம் முதியோர்தின விழா “முதல் மரியாதை" விருது - 2014. பாலமுனை இப்னு ஸீனா வித்தியாலய கல்வி சார் ஊழியர் கழகம் இலக்கிய பணியை பாராட்டி நினைவுப் பேழை – 2015, தடாகம் கலை இலக்கிய வட்டம், பாவரசு பட்டம் - 2016.நிந்தவூர் ஆர்கே மீடியா சிறந்த கலைஞர் கௌரவம் - 2016.கவிஞர் சோலைக்கிளி தனது ‘மண்கோழி’ கவிதைநூல் சமர்ப்பணம்,அட்டாளைச்சேனை பிரதேச கலைஞர் கௌரவிப்பு – 2017, தொப்புள் கொடியும் தலப்பாகையும் நூலுக்கு சாகித்திய மண்டல விருது 2017. தொப்புள் கொடியும் தலப்பாகையும் நூலுக்கு ‘கொடகே விருது’ - 2017. சாகித்திய விருது, கொடகே விருது பெற்றமைக்காக அட்டாளைச் சேனை பிரதேச செயலக கலாசார பிரிவு பாராட்டு, பரிசு  - 2017.அக்கரைப்பற்று தேசிய பாடசாலை “வாழும் போதே வாழ்த்துவோம்" சாதனையாளர் பாராட்டு நிகழ்வில் மகா உன்னதம் விருது - 2017. அட்டாளைச்சேனை நுஜா ஊடக அமைப்பு மே தின விழாவின் ‘மக்கள் கவிஞன்’ பட்டம் விருது. ஒளி அரசி சஞ்சிகை முகப்புப்படம் பிரசுரிப்பு, கௌரவம் - 2017.படிகள் இலக்கிய சஞ்சிகை முகப்புப்படம் பிரசுரிப்பு கௌரவம் - 2018.

பரிசுகள்
 YMMA தேசிய கௌன்ஸில் அகில இலங்கை ரீதியில் நடத்திய கவிதைப் போட்டி முதல் பரிசு -1982.சர்வதேச கூட்டுறவு தின விழா , கவிதைப் போட்டி முதல் பரிசு - 1982. கிழக்கு மாகாண சபை சமூக சேவை அமைச்சு நடத்திய கலாசார விழா கவிதைப் போட்டி முதல் பரிசு - 2011. சர்வதேச கூட்டுறவு தின விழா மேடை நாடகப் போட்டி பிரதியாக்கம் முதற் பரிசு - 1983. சம்மாந்துறை மக்கள் கலைவட்டம் மேதின கவிதைப்போட்டி இரண்டாம் இடம் - 1983. அம்பாறை மாவட்ட சாஹித்ய விழா, நாடக பிரதிப் போட்டி இராண்டாமிடம் - 1983. இலங்கை இஸ்லாமிய ஆய்வகம் தினக்குரல் பத்திரிகையோடு இணைந்து நடத்திய சர்வதேச மரபுக் கவிதைப் போட்டி சிறப்புப் பரிசு - 2009. பேராதனை பல்கலைக்கழகம் நடத்திய சிறுகதைப் போட்டி சிறப்புப் பரிசு - 1998.காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன கலை கலாசார பேரவை கிழக்கிலங்கை ரீதியில் நடத்திய கவிதை நிகழ்வுகளுக் கான போட்டியில் ‘தொப்புள் கொடியும் தலைப் பாகையும்’ கவிதை நூல் முதல் பரிசு பெற்றமைக்காக பாராட்டும் பரிசும் கௌரவமும்-2018.
சில அரங்குகள்
இலங்கை வானொலி கலைக் கோலம் , முத்துப் பர்தல் நிகழ்ச்சிகளில் பேட்டி, பேட்டி கண்டவர்கள்,ஜோர்ஜ் சந்திர சேகன், நீலாபாலன். ரூபவாஹினி “உதய தரிசனம்" நிகழ்ச்சியில் நேர்காணல் , நேர் கண்டவர்: கமலினி செல்வராசன்.வசந்தம் தொலைக்காட்சியில் தூவானம் நிகழ்ச்சியில் நேர்காணல் (2010{ 2012{2017) நேர் கண்டவர் நாகபூஷணி.திருமலை எழுத்தாளர் கலைஞர் மாநாடு சிறுகதை அரங்கு 1975 தலைமை என். கே. ரகுநாதன்.மன்னார் கவிஞர் மாநாடு கவியரங்கு 1976 (தலைமை புதுவை இரத்தின துரை)பாரதி நூற்றாண்டு விழா கவியரங்கு 1983 தலைமை - சட்டத்தரணி எம்.எச்.எம். அஷ்ரஃபதேசிய மீலாத் விழா கவியரங்கு 1997 தலைமை : கவிக்கோ அப்துர் ரகுமான்.அல்லாமா இக்பால் தேசிய மாநாடு கவியரங்கு அழைப்பு 1998 தலைமை : பேராசிரியர் துரை மனோகரன், உலக இஸ்லாமிய தமிழாராய்ச்சி மாநாடு, கவியரங்கு 2002 தலைமை: பாவலர் பசில் காரியப்பர்.ரூபவாஹினி தொலைக்காட்சி கவியரங்கு 1997, தலைமை புலவர் நாயகம் மருதூர்க்கனி. நேத்ரா தொலைக்காட்சி கவியரங்கு 2010 தலைமை : தமிழ்த் தென்றல் அலி அக்பர். காத்தான்குடி “நதியே நீ பாடிக் கொண்டிரு" கவியரங்கு  2014 தலைமை : தமிழ்நாடு பேராசிரியர் தி.மு. அப்துல் காதர். கிழக்கு மாகாண கல்வி விளையாட்டு, பண்பாட்டலுவல்கள் திணைக் களம் நடத்திய தமிழ் இலக்கிய விழா கவியரங்கு - 2017.
தலைமை - சோலைக்கிளி மருதமுனையில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழா.“நான் எனும் நீ" கவிதை நூல் மீள் வெளியீடு, கவிப் பொழில்  2017 தலைமை : முழக்கம் மஜீத்.

-கலாபூஷணம்.பி.எம்.எம்.ஏ.காதர்-



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7