LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, March 22, 2019

கார்பன் பரிசோதனை அறிக்கையால் அகழ்வு நடவடிக்கைகள் நிறுத்தப்படக்கூடாது: சாலிய பீரிஸ்

கார்பன் பரிசோதனை அறிக்கையினை மட்டும் வைத்துக்கொண்டு அகழ்வு நடவடிக்கைகளுக்கு கால வரையறையினை நிர்ணயம் செய்யத்தேவையில்லை என காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாகவும், கார்பன் பரிசோதனை அறிக்கை தொடர்பாகவும் மன்னார் மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் இன்று (வெள்ளிக்கிழமை) விசேட சந்திப்பு இடம்பெற்றது.

மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக தற்போதைய கார்பன் பரிசோதனை அறிக்கையினை மட்டும் வைத்துக்கொண்டு கால வரையரையினை நிர்ணயம் செய்ய வேண்டிய தேவை இல்லை. மேலதிகமான ஆய்வுகளையும் செய்ய முடியும்.

மன்னார் மனிதப் புதைகுழியின் மனித எலும்புக்கூடுகளின் கார்பன் பரிசோதனை அறிக்கை அனைத்து தரப்பினருக்கும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிய வருகின்றது.

எனினும் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் கார்பன் பரிசோதனைக்கு கொண்டு சென்றுள்ள விதம் தொடர்பில் எமக்கு நம்பிக்கை இருக்கின்றது.

தற்போதைய கார்பன் பரிசோதனை அறிக்கையினை மட்டும் வைத்து கால வரையரையினை நிர்ணயம் செய்ய வேண்டிய தேவை இல்லை.

மேலதிகமான ஆய்வுகளையும் செய்ய முடியும். மண் மற்றும் கண்டு பிடிக்கப்பட்ட தடையப்பொருட்களின் ஆய்வுகளை உள்ளடக்கி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதன் ஆய்வு அறிக்கை வந்ததன் பின்னர் அனைத்து அமைப்புக்களும் இணைந்து ஒரு பொருத்தமான முடிவுக்கு வர முடியும்” என சாலிய பீரிஸ் மேலும் குறிப்பிட்டார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7