LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, March 23, 2019

காசல்ரீ நீர்த்தேக்க பிரதேசத்திலும் செயற்கை மழை

செயற்கை மழை பெய்வதற்கான வேலைத்திட்டம் காசல்ரீ நீர்த்தேக்க பிரதேசத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

செயற்கை மழை பெய்வதற்கான வேலைத்திட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று (சனிக்கிழமை)  மேற்கொள்ளப்பட்டது.

இலங்கை விமானப்படையின் லு12 விமானத்தை பயன்படுத்தி செயற்கை மழைக்கான இரசாயன பதார்த்தம் தூவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மவுஸ்ஸாகலை நீர்த்தேக்க பிரதேசங்களில் நேற்று செயற்கை மழையினை பெய்ய வைப்பதற்காக வான் பரப்பில் இரசாயன பதார்த்தம் தூவப்பட்டு, அது வெற்றியளித்திருந்தது.

இந்நிலையில் இன்று காசல்ரீ நீர்த்தேக்க பிரதேசத்திலும் இத்திட்டம் வெற்றியடைந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்த திட்டம், காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகலை நீர்த்தேக்க பிரதேசங்களில் எதிர்வரும் தினங்களிலும் முன்னெடுக்கப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கிணங்க தாய்லாந்து நிறுவனமொன்றின் மூலம்  இந்த திட்டம் செயற்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7