மேலும், இத்தடைகளை அகற்றி தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பது மிகவும் அவசியமானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதத்தில் இன்று (வியாழக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும் போதே சம்பந்தன் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தம், நீடித்த தேசிய பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத்தரும் தருணத்தை திறந்துவிட்டிருந்தது.
பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வை வழங்குவதை அது உறுதிப்படுத்தியிருந்தது. அத்துடன் நாட்டின் இறைமை, எல்லைப் பாதுகாப்பு என்பனவற்றையும் அது உறுதிப்படுத்தியிருந்தது. மேலும் மத்திய அரசாங்கம் ஏனைய பகுதிகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் வழிமுறைகளையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்த நாடு மக்களுக்கானது. மாகாண சபைகள் மக்களுக்கான பிரதிநிதித்துவ அரசியலைப் பாதுகாக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டது. ஆனாலும் தீர்வுக்கான பயணம் முழுமை பெறவில்லை.
இந்த நடாளுமன்றம், புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் நோக்குடன், அரசியலமைப்புப் பேரவையாக மாற்றப்பட்டது. இருந்த போதிலும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் சில தடைகள் காணப்படுகின்றன.
தடைகளை நாம் அகற்ற வேண்டும். ஆகவே நாடாளுமன்றத்தின் ஊடாக புதிய அரசியலமைப்பினைக் கொண்டுவந்து தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது மிகவும் அவசியமானது.
