பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நல்லாட்சி அரசாங்கம் சர்வதேசத்தின் மத்தியில் அடிபணிந்து சென்றமை வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.
வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவின் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரது நோக்கங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
சர்வதேச நாடுகள் இலங்கைக்கு எதிராகத் தமது அதிருப்தியினை வெளிப்படுத்தி வருகின்றன. சர்வதேசத்தின் உறவுகளுக்காக நாட்டின் இறையாண்மையினை ஒருபோதும் விட்டுக் கொடுக்க அனுமதிக்க முடியாது” என கெஹெலிய ரம்புக்வெல மேலும் குறிப்பிட்டுள்ளார்.






