ரொவெனீமுக்கு அருகே ஆர்வனி ஸ்னோ நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த விருந்தினர்களுக்கு அற்புதக் காட்சியை காண்பதற்கு பல மணிநேரம் வாய்ப்பு கிடைத்தது.
பச்சை, இளஞ்சிவப்பு, ஊதா மற்றும் வெள்ளை நிறங்களில் துருவ ஒளி வானத்தை அலங்கரித்தது.
இந்த காட்சியின் ஒளிப்பதிவு ரொவெனீமை சேர்ந்த ஒருவரால் காணொளியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
துருவ ஒளி அல்லது ஆரோரா என்பது வட, தென் துருவங்களை அண்மிய பகுதிகளில் தோன்றும் ஒரு அபூர்வ ஒளித் தோற்றமாகும். இது பொதுவாக இரவு நேரங்களிலேயே தோன்றுகின்றது.
இந்த ஒளித் தோற்றப்பாடு உலகம் தோன்றிய காலம் தொட்டே காணப்படுவதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.
இந்த ஒளித்தோற்றமானது பொதுவாக ஆர்க்டிக், அண்டார்க்டிக்கா பகுதிகளில் இலகுவில் காணக்கூடியதாக இருக்கின்றது.
வட துருவத்தில் தோன்றும்போது இது வடதுருவ ஒளி எனவும், தென் துருவத்தில் தோன்றும்போது இது தென் துருவ ஒளி எனவும் அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
