ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இதை சீனாவின் பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனம்ஹூவாவி மீறியது என குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. மேலும், அந்த நிறுவனத்தின் மீது 23 குற்றச்சாட்டுகளை அமெரிக்கா சுமத்தியது.
இந்த நிலையில், கனடாவின் வான்கூவர் விமான நிலையத்தில் ஹூவாவி தொலைத்தொடர்பு நிறுவனத்தின் நிதியியல் தலைமை அதிகாரி கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி கைது செய்யப்பட்டார்.
இதன் பின்னர் அவர் வான்கூவர் நகரில் உள்ள தனது இல்லத்தில் தங்கி இருக்க வேண்டும், பாஸ்போர்ட்டை ஒப்படைத்து விட வேண்டும் என்பது உள்பட பல நிபந்தனைகளின் பேரில் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது தொடர்பான விசாரணை பிரிட்டிஷ் கொலம்பியா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
இதற்கிடையே அவரை நாடு கடத்துவதற்கு அனுமதி வழங்குவோம் என்று கனடா அறிவித்துள்ளதுடன் அதற்கான நடைமுறைகளையும் ஆரம்பித்துள்ளது. இருப்பினும் இறுதி முடிவை நீதிமன்றமே எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கனடாவின் இந்த முடிவுக்கு, ஒட்டவாவில் உள்ள சீன தூதரகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அத்தோடு இவ்விடயம் அரசியல் துன்புறுத்தல் எனவும் குற்றம் சாட்டியுள்ளது.
இருந்தபோதும் இதில் 6 ஆம் திகதி பிரிட்டிஷ் கொலம்பியா உயர் நீதிமன்றம் இது குறித்த முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
