
ஓக்வில்லி பகுதியில் நேற்று(சனிக்கிழமை) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
13 வயதான சிறுவன் செலுத்திய கார் ஒன்றே வீதியினை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விபத்தில் 14 மற்றும் 16 வயது சிறுவர்கள் உள்ளிட்ட காரின் சாரதியும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரின் சாரதியான 13 வயதுடைய இளைஞன் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
