லண்டனின் Alvinston பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே நேற்று(சனிக்கிழமை) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த நால்வர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது 27, 55, 47 மற்றும் 22 வயதுடையவர்களே காயமடைந்துள்ளனர்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.





