அப்பகுதியைச் சேர்ந்த லாரி ப்ரான்சாக் ( Larry Fronczak) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ரொரண்டோவின் கிபிளிங் அவென்யூ பகுதியில் வசித்த 79-வயதுடைய பெண் ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த கொலைச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றிருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இக்கொலை தொடர்பாக மேலதிக விசாரணைகளை ரொரண்டோ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.






