
இன்று (புதன்கிழமை) காலை வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
இதனால், குற்றவாளியை உடனடியாக கைதுசெய்யக் கோரி, துடியலூர் பேருந்து நிலையம் முன்பு உறவினர்கள், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை, துடியலூர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி கடந்த திங்கட்கிழமை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமற்போயுள்ளார். இதையடுத்து தடாகம் பொலிஸில் முறைப்பாடு வழங்கப்பட்டதையடுத்து குடும்பத்தினருடன் பொலிஸாரும் இணைந்து சிறுமியைத் தேடிவந்தனர்.
சிறுமி கண்டுபிடிக்கப்படாத நிலையில் நேற்று அவர்களின் வீட்டிற்கு அருகே காயங்களுடன் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவப் பரிசோதனையில் சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
இதனிடையே, சந்தேகத்தின் பேரில் 4 பேரைக் கைதுசெய்துள்ள பொலிஸார், 10 குழுக்களை அமைத்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, நாளை மாலை 3 மணிக்குள் கொலையாளிகள் கைதுசெய்யப்படுவார்கள் என பொலிஸார் கூறியதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
