சாதனை புரியும் நோக்கில் ஏஞ்செல்ஸின் உச்சிக்குச் சென்ற பவல் அங்கிருந்து குதித்துள்ளார். தரையைத் தொடுவதற்கு சில நூறு அடிகளே இருக்கும் நிலையில் பரசூட்டைப் பயன்படுத்தி பத்திரமாக தரையிறங்கியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது நண்பர் குழுவுடன் சுற்றுலாச் சென்ற பவல் மேற்படி சாதனையை படைத்துள்ளார். தமது 3 வருட உல்லாச பயணங்களின் இலக்கை அடைந்துள்ளதாக பவல் நெகிழ்ந்துள்ளார்.
வெனிசுலாவில் உள்ள 3 ஆயிரத்து 212 அடி உயரம் கொண்ட ஏஞ்சல் நீர்வீழ்ச்சி உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.






