அண்மைய நெருக்கடிகள் விவசாயிகளுக்கு ஏன் ஏற்பட்டது என்றும்- கனேடிய அரசியல்வாதிகள் இதுபற்றி என்னநினைக்கிறார்கள் என்பதனையும் ஆராய்ந்து வருவதாக iPolitics பத்திரிகையின் வேளாண்மை தொடர்பான செய்தியாளர் Kelsey Johnson தெரிவித்துள்ளார்.
கெனோலா என்ற எண்ணெய் பெறும் விதையானது 1970 ஆம் ஆண்டுகளில் மானிடோபா பல்கலைக்கழகம், வேளாண்மை மற்றும் கனடா விவசாய துறை ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டது. அதன் தர நிர்ணயத்தில் Canada என்று குறிப்பதற்காக ‘Can’ என பெயரிட்டுள்ளனர்.
குறைந்த எரியமிலம் கொண்ட கெனோலாவையே அதிகமாக வளர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (அதிய எரியமிலம் கொண்டவை உடல் நலத்திற்கு தீங்கானவை)
காலிஃபிளவர் மற்றும் முட்டைக்கோசு போன்ற இதன் தாவர குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய தாவரங்களை விட கனோலா 5 சதவீதத்திற்கும் குறைவான அமில அளவைக் கொண்டிருக்கிறது.






