டொன் மில்ஸ் வீதி மற்றும் ஷெப்பேர்ட் அவனியூ பகுதியில் அமைந்துள்ள குறித்த அந்த வர்த்தக வளாகத்தில், நேற்று(வெள்ளிக்கிழமை) முற்பல் 11 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனை உறுதிப்படுத்தியுள்ள அதிகாரிகள், குறித்த கொள்ளைச் சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு ஒளிப்பதிவு கருவியில் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வர்த்தக வளாகத்தின் நுளைவாயில் ஒன்றின் அருகே கறுப்புநிற குளிர் அங்கியுடன் அங்கு நுளைந்த நபர், இருவரையும் நோக்கிச் சென்று, கரடிகளின் தாககுதலில் இருந்து தற்காத்துக் கொள்ளப் பயன்படுத்தப்படும் தெளிப்பான் மூலம் அங்கிருந்த இரண்டு ஆண்களில் ஒருவரின் முகத்தில் தாக்கியபோது அங்கே மோதல் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் இரவு தகவல் வெளியிட்டுள்ள பொலிஸார், இந்த தாக்குதல் சம்பவத்தின்போது, 37 வயதான ஆண் ஒருவரிடம் இருந்து 27,000 டொலர்களுக்கும் அதிகமான பெறுமதி உடைய கைக்கடிகாரம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவரை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தோர், அல்லது சந்தேக நபர் குறித்து தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






