LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, March 24, 2019

தேவாலயத்தில் பிரார்த்தனை இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது பாதிரியார் மீது கத்திக்குத்து!

மொன்றியல் பகுதியில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது பாதிரியார் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மொன்றியல் சென் ஜேசப் ஜெபக்கூடத்தில், நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 8.40 மணி அளவில், பிரார்த்தனையை நடாத்திக் கொண்டிருந்த போதே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இடம்பெற்றபோது வழிபாட்டில் பெருமளவு மக்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்தினைச் சென்றபோது, அந்த கத்திக் குத்தினை மேற்கெர்ணட நபரை தேவாலயத்தின் காவலர்கள் பிடித்து வைத்திருந்ததாக மொன்றியல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வழிபாடு இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில், திடீரென 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பாதிரியாரை நோக்கிச் சென்று மிக வேகமாக இந்த தாக்குதலை மேற்கொண்டதாகவும், அங்கு கூடியிருந்தோரால் உடனடியாக அதனைத் தடுக்க முடியவில்லை என்றும் சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதன்பின்னர் அங்கிருந்த மக்கள் அனைவரும் விரைந்து செயற்பட்டு அந்த நபரை பிடித்ததாகவும், தாக்குதலை மேற்கொண்ட போது அந்த நபர் எந்தவித வார்த்தைப் பிரயோகங்களையும் மேற்கொள்ளவில்லை என்றும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலின்போது உடலின் மேற்பாகத்தில் கத்திக் குத்துக்கு இலக்கான பாதிரியார் உடனடியாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7