LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, February 2, 2019

UNHRC வழிகாட்டுதலின் கீழ் 83 அகதிகள் தாயகம் திரும்புகின்றனர்!

தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்த 39 குடும்பங்களைச் சேர்ந்த 83 பேர் தமது தாயகத்திற்கு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின் கீழ் இந்த குழு தாயகத்திற்கு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 2009 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை 11,020 தமிழர்கள் நாடு திரும்பியுள்ளனர். இதனை விட மேலும் 3,815 அகதிகள் தங்கள் தாயகத்திற்கு திரும்புவதற்கு தற்போது ஒப்புக்கொண்டனர்.

இவ்வாறு வருபவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலையை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அவர்கள் மீண்டும் தயக்கம் திரும்பும் முகமாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திடம் இருந்து இலவச விமான பயணசீட்டுகளும் வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு வருபவர்களுக்கு வாழ்க்கை செலவுக்கான சலுகையாக ஆறு மாத காலத்திற்கு 100,000 ரூபாய் வரை உலர் உணவு மற்றும் நிதிகளை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடு திரும்புமாறு அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்து அரசாங்கத்தால் விடுக்கப்பட்ட அழைப்பின் விளைவாக அகதிகள் நாடு திரும்பி வருகின்றது.

இதேவேளை தமிழகத்தில் இன்னமும் 65ஆயிரம் இலங்கைத் தமிழ் அகதிகள் முகாங்களிலும், 35 ஆயிரம் அகதிகள் அகதிமுகாங்களிற்கு வெளியிலும் வசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7