
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இந்த வாழ்த்து செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வருடத்தில் இலங்கை மற்றும் இலங்கை மக்களுக்கும் அதிஷ்டகரமானதும் மகிழ்ச்சிகரமானதுமாக அமைய வேண்டும் என தமது வாழ்த்து செய்தியில் பிரித்தானிய மகாராணி எலிசபெத் குறிப்பிட்டுள்ளார்.
133 வருடங்களாக பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த இலங்கைக்கு 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி சுதந்திரம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், 71வது சுதந்திர தின நிகழ்வுகள் கோலாகலமாக எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளது.
இதற்குரிய நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
