
பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ மீது வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றில் புலம்பெயர் அமைப்பொன்று தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது, பொதுநலவாய மற்றும் வெளிவிவகார அலுவலகங்களுக்கான சட்டத்தரணிகள் இந்த விடயத்தில் நடுநிலையை பேணுவதாக நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கிற்காக, பெர்னான்டோவின் சட்டத்தரணிகள் கடந்த புதன்கிழமையே நியமிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கிற்கு தயாராகுவதற்கு நேரம் வழங்க வேண்டும் என்ற காரணத்தினால் குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சு உரிமைகோர மறுக்கின்றமையும் தம்முடைய பணி விவரங்களில் உள்ளடக்கப்படாத விடயங்கள் குறித்துக் காணப்படும் ராஜதந்திரிகளுக்கு உரியதான சிறப்புரிமையும் இதில் முக்கியத்துவம் பெறுகின்றது.
