சவுதி அரேபியாவின் அமெரிக்காவுக்கான தூதராக முதன் முறையாக பெண் ஒருவரை அந்நாட்டு அரசாங்கம் நியமித்துள்ளது.அந்தவகையில் நேற்று (சனிக்கிழமை) சவுதி அரேபியாவின் அமெரிக்க தூதுவராக இளவரசி ரீமா பிண்ட் பண்டர் பின் சுல்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் அமெரிக்காவுக்கான தூதராக, சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் இளைய சகோதரர் காலித் பின் சல்மான் கடமையாற்றினார்.
ஆனால் தற்போது அவர் சவுதி அரேபியாவின் பாதுகாப்புத்துறை இணை அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.
ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் படுகொலைக்குப் பின்னர் அமெரிக்கா – சவுதி இடையேயான உறவு பாதிக்கப்பட்டது. இதை சரி செய்யும் முகமாகவே தூதர்களின் நியமனங்கள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.





