ஒரு சில மத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே பிரச்சினைகளை தீர்க்கும் விடையத்தில் முட்டுக்கட்டையா இருக்கின்றனர் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.இதன் காரணமாகவே, பிரச்சினைகளுக்கு தீர்வைக் கண்டு நாட்டினை மீட்டெடுக்க முடியாதுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டின்னார்.
களனியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் கூட்டம் ஒன்றிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இவ்வாறான குழப்பங்களை விளைவிப்பவர்கள் நாடு குறித்து சிந்துத்து செயற்பட வேண்டும் என கூறினார்.
இதனை விடுத்து அனைத்து வேலைதிட்டங்களையும் தடுக்க, ஏதேனும் குழப்பங்களை ஏற்படுத்துவதனால் மக்களே பிரச்சினைகளை சந்திக்க நேரிடுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.





