தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பது எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை பொறுத்தவரையில் ஒரு அரசியல் பிரச்சாரமே என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வு தொடர்பாக பொய்யான வாக்குறுதிகளை குறிப்பிட்டு தமிழ் மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றுவதை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் “தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பது எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை பொறுத்தவரையில் ஒரு அரசியல் பிரச்சாரமே.
இவர்கள் ஒருபோதும் சமவுடையமையான அரசியல் கொள்கைகளை பின்பற்றமாட்டார்கள். ஆகவே பொய்யான வாக்குறுதிகளை குறிப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன் நாடு பிளவுப்படும் வகையில் எவ்விதமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்படவேண்டும்.
அரசியல் ரீதியில் தமிழ் மக்கள் காலம் காலமாக பிரித்தாளப்பட்டுள்ளனர் என்ற விடயத்தை அனைவரும் ஏற்றுக் கொள்ளவே வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.





