19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை புறக்கணிக்க எதிர்தரப்பினர் எடுக்கும் முயற்சிக்கு இடமளிக்க போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.இந்த அரசியலமைப்பு திருத்தம் ஐக்கிய தேசிய கட்சியின் நலனுக்காக கொண்டுவரப்படவில்லை என்றும் சர்வதேச வர்த்தக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டு மக்களின் மத்தியில் ஜனநாயகத்துக்கு எதிரானதும் மக்களின் உரிமைகளை ஊழல் செய்யும் வகையில் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது என்ற வகையில் கருத்துக்களை உருவாக்கவே முயற்சிக்கின்றனர்.
ஆயினும் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஐக்கிய தேசிய கட்சியின் நலனுக்காக கொண்டுவரப்படவில்லை என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.





