வடக்கு எட்மன்டன் பகுதியில் உள்ள வாகன திருத்திமிடத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தை அடுத்து இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.Griesbach அருகில் உள்ள வாகன திருத்திமிடத்தில் ஏற்பட்ட வெடிப்பு தொடர்பாக தீயணைப்பு வீரர்களுக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து அவர்கள் அந்த பகுதிக்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது தீயணைப்பு வீரர்களினால் இனம்தெரியாத இருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக எட்மன்டன் தீயணைப்பு சேவை நிலையம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.





