
மடத்தடியில் வீட்டில் யாருமில்லாத பகல் நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து மூன்று பவுண் தங்க நகை மற்றும் பணம் என்பவற்றை திருடியதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
அதற்கமைய யாழ். மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி ஜெரோசன் தலமையிலான குழுவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, நாவற்குழியைச் சேர்ந்த 22 மற்றும் 24 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.
குறித்த சந்தேகநபர்களிடமிருந்து தங்க நகைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
