
திருகோணமலைக்கு இன்று (புதன்கிழமை) விஜயம் மேற்கொண்டுள்ள மின் சக்தி, எரிசக்தி மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சருடன் இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச தலைமையிலான குழுவினர் திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டு மாவட்ட செயலகத்தில் இலங்கை மின்சார சபையின் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.புஷ்பகுமார தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், “கொழும்பு மாத்திரம் அபிவிருத்தியடைய வேண்டும் என்பது எமது இலக்கல்ல. ஏனைய மாவட்டங்களும் அபிவிருத்தியடைய வேண்டும்.
மின்சாரத்தை சேமித்து வைக்கக்கூடிய மற்றும் சிக்கனமாக பாவிக்கக்கூடிய வகையில் பொது மக்கள் உட்பட நானும் செயற்பட வேண்டும். குறைந்தளவிலான மின்சாரக் கட்டணத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மக்களது ஒத்துழைப்பும் எமக்குத் தேவை.
இதனிடையே, சம்பூரில் காணப்படும் இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான நிலப்பரப்பில் பாரிய மின்சக்தித் திட்டம் ஒன்றை எதிர்காலத்தில் நாம் ஆரம்பிக்கவுள்ளோம்” என்றார்.
