
கொழும்பில் ‘வியத்மக’ அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினூடாக நாடாளுமன்றத்தைக் கலைத்து அதன்மூலம் கோப் குழுவின் அறிக்கையினை புறக்கணிப்பதே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினது திட்டம்.
இது மத்தியவங்கி பிணைமுறி விவகாரம் குறித்த கோப் குழுவின் அறிக்கை தொடர்பான விடயங்கள் வெளிப்படுத்தப்படக் கூடாது என்பதற்காகவே பிரதமர் இவ்வாறு செயற்பட்டுள்ளார்.
அத்துடன், அர்ஜூன் மகேந்திரனைப் பாதுகாப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த முழுமையான ஆதாரங்கள் அனைத்தும் இருக்கின்றன.
இந்தநிலையில், பிணைமுறி விவகாரத்தின் பின்னணி குறித்து முழுமையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்” என அஜித் நிவாட் கப்ரால் மேலும் குறிப்பிட்டுள்ளார்
