
பீஜிங்கில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின்போது சீன வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் கெங் ஷுவாங் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளையும், சந்திப்புகளையும் சீனா தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.
இந்நிலையில், வியட்நாமில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள இரண்டாவது உச்சிமாநாடு வெற்றிகரமாக அமையும் என எதிர்பார்க்கிறோம்.
இதேவேளை, வடகொரியா மீதான ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை அனைத்து தரப்புகளும் முழுமையாக, துல்லியமாக அமுல்படுத்தும் என சீனா எதிர்பார்க்கிறது.
பொருளாதார தடைகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் அரசியல் தீர்வை ஊக்குவித்தல் என்பன ஐ.நா. தீர்மானத்தின் தேவைகளாகும். எனவே, அதனை புறக்கணிக்க முடியாது.
தற்போதைய சூழ்நிலையில் அத்தடைகளை மீளப்பெற்று அரசியல் தீர்வு வழிமுறைக்கு ஆதரவளிப்பதற்கு ஐ.நா. பாதுகாப்பு சபை பரிசீலிக்கும் என சீனா நம்புகிறது. இதுவே, சீனாவின் ஸ்திரமான நிலைப்பாடு” எனத் தெரிவித்தார்.
