
ஊடகவியாளர்களை இன்று (வியாழக்கிழமை) சந்தித்து கருத்து தெரிவித்த போதே, அமெரிக்காவுடனான ஆயுத போட்டியை ரஷ்யா விரும்பவில்லை என கூறினார்.
இதே நேரத்தில் ரஷ்யாவை குறி வைத்து அணு ஆயுத ஏவுகணைகளை ஐரோப்பிய நாடுகளில் நிறுத்த அமெரிக்க முயற்சி செய்வதாகவும் அவர் கூறினார்.
ஏவுகணைகளை ஏவி மொஸ்கோவை தாக்கும் வகையில் அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர், இதற்கு பதிலடி கொடுக்க ரஷ்யாவும் தயாராக இருக்கின்றது என கூறினார்.
அமெரிக்காவுக்கு அருகில், சர்வதேச கடல்பரப்பில் ரஷ்யா கப்பல்கள், நீர் மூழ்கிகள் அணு ஆயுத ஏவுகணைகளுடன் நிறுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
இந்த நிலையை அமெரிக்கா விரும்புகிறதா என கேள்வியெழுப்பிய அவர் அமெரிக்காவின் எந்த சவாலையும் எதிர்கொள்ள ரஷ்யா முழு அளவில் தயாராக இருக்கின்றது என விளாடிமிர் புடின் குறிப்பிட்டுள்ளார்.
