LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, February 6, 2019

அமெரிக்காவின் கூற்றுக்கு ஈராக் கண்டனம்!

ஈரானின் நடவடிக்கைகளை அவதானிப்பதற்காக அமெரிக்க பாதுகாப்புப் படை முகாம் அமைக்கப்பட வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்கு ஈராக் கண்டனம் வெளியிட்டுள்ளது.

ஈரானின் நடவடிக்கைகளை அவதானிப்பதற்காக அமெரிக்க பாதுகாப்புப் படை முகாம் அமைக்க எண்ணியுள்ளதாக, அமெரிக்க ஜனதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஈராக்கிய ஜனாதிபதி பர்ஹாம் சாலே (Barham Saleh), அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்கு கண்டனம் வெளியிட்டுள்ளார்.

குறித்த நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்கா, ஈராக்கிடம் அனுமதி ஏதும் கோரவில்லை எனவும் சாடியுள்ளார்.

இதேவேளை, ஈராக்கில் சுமார் 5,000 அமெரிக்கப் படையினர் நிலை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7